Site icon Tamil News

ஜப்பானிடம் இருந்து இலங்கைக்கு கிடைத்த மகிழ்ச்சியான செய்தி

கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ள இலங்கை, அது தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கைகளில் கைச்சாத்திடப்பட்டு பாதியில் நிறுத்தப்பட்ட ஜப்பானிய திட்டங்களை இலங்கையில் மீள ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேகி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர், இருதரப்பு கடன் வழங்குநர்களுடன் கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டதற்கு இலங்கை தனது பாராட்டுக்களை தெரிவித்ததாகக் குறிப்பிட்டார்.

அத்துடன், இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு ஜப்பான் தொடர்ச்சியான ஆதரவை வழங்கும் எனவும் தூதுவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“இலங்கையின் பொருளாதாரத்தை மீட்பதற்கும் சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையை மீளப் பெறுவதற்கும் இது ஒரு முக்கியமான மைல்கல் என்றே கூற வேண்டும். இலங்கையின் கடன் நெருக்கடியை தீர்க்க ஜப்பான் தன்னால் இயன்ற உதவிகளை செய்து வருகிறது.

புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானவுடன், இந்த நாட்டில் ஜப்பானிய திட்டங்களை மீண்டும் தொடங்குவதற்கான நிதியைப் பயன்படுத்துவதை விரைவுபடுத்த முயற்சிக்கிறோம். நிதி நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு ஜப்பான் இலங்கையை முழுமையாக ஆதரிக்கிறது” என்றார்.

Exit mobile version