Site icon Tamil News

ஜெர்மனியில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வெளியான மகிழ்ச்சியான தகவல்

ஜெர்மனியில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது.

ஜெர்மனியின் இடது சாரி கட்சி என்று சொல்லப்படுகின்ற லின்ஸ் கட்சியுடைய முக்கிய அரசியல்வாதி ஒருவர் 100 பில்லியன் யுரோக்கள் முதுசமாக வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

இவ்வாறு 100 பில்லியன் யுரோக்கள் முதுசமாக வழங்கப்படும் பொழுது சமூதாயத்தில் 10 சதவீதமானவர்களே இந்த பணத்தை பெற்று பயன் பெறுகின்றார்கள் என தெரியவந்துள்ளது.

இதன் காரணத்தினால் சமூதாயத்தில் உள்ள மற்றையவர்கள் இவ்வாறான வசதியுடன் வாழ முடியாத சூழ்நிலை ஏற்பட்டு வருகின்றது.

அதன் காரணத்தினால் அரசாங்கமானது இவ்வாறு 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 50 ஆயிரம் யுரோக்களை வழங்க வேண்டும் என்ற ஒரு வேண்டுதலை விடுத்து இருக்கின்றார்.

இந்நிலையில் ஏற்கனவே SPD என்று சொல்லப்படுகின்ற சமூக ஜனநாயக கட்சியுடைய முக்கிய தலைவர்கள் இந்த வருட ஆரம்பத்தில் ஒவ்வொரு 18 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு 60 ஆயிரம் யூரோக்களை வழங்க வேண்டும் என்ற வேண்டுதலை விடுத்து இருந்தது.

இந்நிலையில் இந்த இடது சாரி கட்சியுடைய முக்கிய அரசியல் பிரமுகர் மாட்டின் ஷேடன் என்பவர் வேண்டுதலை விடுத்துள்ளார்.

இவ்வாறான வேண்டுதல் விடுக்கப்பட்ட நிலையில் அரச தரப்பினர் எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version