Site icon Tamil News

நகை அடகு வைத்தவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

பொருளாதார நெருக்கடியின் காரணமாக, தங்கப் பொருட்களின் அடமானம் வேகமாக அதிகரித்துள்ளதோடு, 2019 ஆம் ஆண்டில் 210 பில்லியன் ரூபாவாக இருந்த அடமான முன்பண நிலுவைத் தொகை, இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் 172 சதவீதம் அதிகரித்து 571 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், உரிமம் பெற்ற வங்கிகளில் அடமான முன்பணம் பெற்ற குறைந்த வருமானம் உடையவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், ஜூன் 30ம் திகதி அல்லது அதற்கு முன் வாடிக்கையாளர்கள் வாங்கும் ரூ.1 லட்சத்துக்கு மிகாமல் அடமான முன்பணத்திற்கு ஆண்டுக்கு 10 சதவீத வட்டி மானியம் வழங்க வேண்டும்.

அது தொடர்பில் நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

இங்கு அடகு வைப்பவர்களிடம் அதிகபட்சமாக 10 வீதத்திற்கு உட்பட்ட மானிய வட்டி வீதம் மாத்திரம் அறவிடப்படும் எனவும், திறைசேரி திட்டமொன்றை தயாரித்து அறிவிக்கும் எனவும் ஊடகத்துறை அமைச்சர், அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

வெகுஜன ஊடக அமைச்சில் இன்று (23) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வங்கி சாரா நிறுவனங்களில் அடகு வைக்கப்பட்டுள்ள தங்கப் பொருள்கள் தொடர்பாக அரசு தலையிடும் முறை இல்லை என்றும், உரிமம் பெற்ற வணிக வங்கிகளில் தங்கப் பொருட்களை அடகு வைத்தவர்களுக்கு இந்த நிவாரணம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

Exit mobile version