Site icon Tamil News

பிரான்ஸ் ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் – அதிகரிக்கப்படும் சம்பளம்

பிரான்ஸில் 2024 ஆம் ஆண்டின் முதல் மாதத்தில் அடிப்படை ஊதியம் அதிகரிக்கப்படவுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

பணவீக்கத்தை கணக்கிட்டு தானியங்கி முறையில் அதிகரிக்கும் இந்த அடிப்படை ஊதியம், ஜனவரி 1 ஆம் திகதி 1.13% சதவீதத்தால் அதிகரிக்கிறது.

ஒருமணிநேரத்துக்கான அடிப்படை ஊதியம் 11.52 யூரோக்களில் இருந்து 11.65 யூரோக்களாக அதிகரிக்கிறது.

இரஷ்யா-உக்ரேன் யுத்தம் ஆரம்பித்ததில் இருந்து ஐரோப்பா முழுவதும் பணவீக்கம் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளது. பிரான்சில் 2021 ஆம் ஆண்டில் இருந்து இதுவரை 7 தடவைகள் அடிப்படை ஊதியம் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version