Site icon Tamil News

சிங்கப்பூரில் 2 மில்லியன் மக்களுக்கு வெளியான மகிழ்ச்சியான தகவல்

சிங்கப்பூர் சுமார் 2 மில்லியன் நாட்டு மக்களுக்கு உதவித் தொகையை வழங்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

உத்தரவாத தொகுப்பு உதவித் திட்டத்தின்கீழ் வழங்கப்பட உள்ள அந்த தொகை எதிர்வரும் பெப்ரவரி மாதம் கொடுக்கப்படும் என சொல்லப்பட்டுள்ளது.

20 வயது அல்லது அதற்கு குறைவு / 55 வயது அல்லது அதற்கு அதிக வயதுடைய அனைவருக்கும் உதவித் தொகை கிடைக்கும். மெடிசேவ் உதவித் தொகையாக S$150 வழங்கப்படும் என நிதியமைச்சகம் கூறியுள்ளது.

அதே போல, குறைந்த வருமானம் கொண்ட 55 வயது அல்லது அதற்கு அதிக வயதுடைய நாட்டின் மூத்த குடிமக்கள் 8,50,000 பேருக்கு S$200 முதல் S$300 வரை ஊக்கத் தொகை கொடுக்கப்படும் என நிதியமைச்சகம் சொன்னது.

Exit mobile version