Site icon Tamil News

நீண்ட காலத்திற்கு பின் கிடைத்த  நல்ல செய்தி : கிரெம்ளின்!

இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தத்தை நீண்ட காலத்திற்கு பின் கிடைத்த  நல்ல செய்தி” என்று கிரெம்ளின் பாராட்டியது.

மனிதாபிமான இடைநிறுத்தங்கள் ஒரு நிலையான தீர்வுக்கான முயற்சிகளை உருவாக்குவதற்கான ஒரே வழி என்றும் கிரெம்ளின் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலின் அரசாங்கமும் ஹமாஸும் காசாவில் குறைந்தது நான்கு நாட்களுக்கு போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதால் மேற்படி தெரிவித்துள்ளது.

கிரெம்ளின் செய்தித் தொடர்பாளரான  டிமிட்ரி பெஸ்கோவ், “ரஷ்யாவும் உலகின் பெரும்பாலான நாடுகளும் போர் நிறுத்தத்திற்கும் மனிதாபிமான இடைநிறுத்தத்திற்கும் அழைப்பு விடுத்து வருகின்றன.

ஏனெனில், இந்த வகையான இடைநிறுத்தங்களின் அடிப்படையில் மட்டுமே, நிலையான தீர்வுக்கான எதிர்கால முயற்சிகளின் சில வரையறைகளை உருவாக்க முடியும் என அவை கருதுகின்றன. இந்த சூழ்நிலையிலேயே கிரம்ளின் மேற்படி செய்தி வெளியிட்டுள்ளது.

Exit mobile version