Tamil News

அஜித்துடன் 5ஆவது முறையாக ஜோடி சேரும் நடிகை? அப்போ அவங்க இல்லையா?

மார்க் ஆண்டனி படத்தின் அதிரி புதிரியான வெற்றிக்கு பின்னர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பு தான் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம்.

இப்படத்தை தெலுங்கில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக இருக்கும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஐதராபாத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. அண்மையில் இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி வைரலானது.

குட் பேட் அக்லி திரைப்படத்தில் இணையும் நடிகைகள் பற்றிய அப்டேட்டும் அவ்வப்போது கசிந்த வண்ணம் உள்ளது.

அந்த வகையில் தெலுங்கில் டிரெண்டிங் நாயகியாக வலம் வரும் ஸ்ரீலீலா இப்படத்தில் நடிக்க கமிட்டாகி உள்ளதாக கூறப்பட்டது.

அதேபோல் சூரரைப்போற்று படத்துக்காக தேசிய விருது வாங்கிய நடிகை அபர்ணா பாலமுரளியும் குட் பேட் அக்லி படத்தில் இணைந்ததாக தகவல் கசிந்தது.

இவர்கள் இருவருமே அஜித்துக்கு ஜோடி இல்லையாம், முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளார்களாம்.

இதனால் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கபோவது யார் என்கிற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்நிலையில், அது யார் என்கிற அப்டேட்டும் லீக் ஆகி இருக்கிறது. அதன்படி குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக நடிகை நயன்தாராவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.

இவர் ஏற்கனவே அஜித்துடன் ஏகன், பில்லா, ஆரம்பம், விஸ்வாசம் போன்ற படங்களில் நடித்துள்ள நிலையில், தற்போது 5-வது முறையாக இணைந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version