Tamil News

தளபதி விஜய் போட்ட ட்வீட்.. ’கோட்’ டிரெய்லர் ரிலீஸ் எப்போ தெரியுமா?

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டிரெய்லர் ரிலீஸ் அப்டேட்டை நடிகர் விஜய் புதிய போஸ்டருடன் தற்போது வெளியிட்டு ரசிகர்களை அமைதியடைய செய்துள்ளார்.

ஏஜிஎஸ் தயாரிப்பில் பிரம்மாண்ட படைப்பாக கோட் திரைப்படம் உருவாகி வருகிறது. மங்காத்தா, மாநாடு படங்களை போல விஜய்யை வைத்து தரமான சம்பவத்தை வெங்கட் பிரபு செய்து வருகிறார்.

‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தின் டிரெய்லர் வரும் ஆகஸ்ட் 17ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என மாஸான போஸ்டருடன் தற்போது விஜய் ட்வீட் போட்டு தனது ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளார்.

கோட் படம் மிகப்பெரிய அளவில் வசூல் வேட்டையாடப் போவது உறுதி என விஜய் ரசிகர்கள் #TheGOATTrailer ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

இதுவரை தென்னிந்திய சினிமா டிரெய்லர்கள் படைக்காத ரெக்கார்டு சாதனையை கோட் டிரெய்லர் நிகழ்த்திக் காட்டும் என விஜய் ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

Exit mobile version