Site icon Tamil News

கோட் டிரைலர் பார்த்துட்டு லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா என்ன சொன்னாங்க தெரியுமா?

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் ரிலீஸ்க்கு தயாராகி வரும் திரைப்படம் ‘ தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்’. சுருக்கமாக தி கோட் என அழைக்கிறார்கள்.

இதில் விஜய்யுடன் இணைந்து பிரசாந்த், பிரபுதேவா, ஜெயராம், மோகன், சினேகா, லைலா, அஜ்மல், மீனாட்சி சவுத்ரி, வைபவ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ.ஜி. எஸ் நிறுவனம் தயாரிக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இப்படம் வருகின்ற செப்டம்பர் 5ம் தேதி அன்று திரைக்கு வருவதை ஒட்டி நேற்று இந்த படத்தின் டிரைலர் வெளியானது.

இதில், பெரும்பாலான காட்சிகள் வெளிநாட்டில் படமாக்கப்பட்டுள்ளன. தந்தை – மகன் என்ற இரட்டை வேடங்களில் நடிகர் விஜய் நடித்துள்ளார். இதற்கு முன்னர் பல படங்களில் இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார். ஆனால் இதில் மிகவும் இளமையான வயதுடைய விஜய்யை டீ-ஏஜிங் தொழில்நுட்பம் பயன்படுத்தி காட்டியிருக்கிறார்கள்.

இந்த நிலையில், விஜயின் கோட் டிரைலர் வெளிவந்தவுடன் யூடியூப்பில் பல மில்லியன் கணக்கான பார்வையாளர்களை தொட்டுவிட்டது.

அதிலும் பல நட்சத்திரங்களும் கோட் பட டிரைலரை பார்த்து பாராட்டியுள்ளனர்.

அந்த வரிசையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா என்ன சொல்லி இருக்காங்க தெரியுமா? “டிரைலர் சூப்பர். வெங்கட் பிரவுவின் படைப்பு அருமை. அதிலும் தளபதி எப்பவுமே ஸ்டைலிஷ் தான். செப்டம்பர் 5 வரைக்கும் காத்திருக்க முடியாது” என தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Exit mobile version