Tamil News

கோட் பட டிக்கெட் குறித்த சர்ச்சைக்கு ரோஹினி தியேட்டர் ஓனர் விளக்கம்

நடிகர் விஜயின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்த படத்திற்காக ரசிகர்கள் வெறித்தனத்துடன் காத்திருக்கின்றனர்.

நடிகர் விஜயின் கோட் படத்தின் புக்கிங்குகள் துவங்கப்பட்டுள்ள நிலையில் ரசிகர்கள் போட்டி போட்டுக் கொண்டு புக் செய்து வருகின்றனர்.

விஜயின் இறுதி படங்களில் ஒன்றான கோட் படம் மிகவும் பிரம்மாண்டமான அளவில் அதிக பொருட்செலவுடன் விஎப்எக்ஸ் உள்ளிட்டவற்றை அதிகமாக செய்து உருவாகியுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் புக்கிங்குகள் தற்போது அதிக அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது குறித்து ரோகிணி திரையரங்க உரிமையாளர் ரேவந்த் தன்னுடைய பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

விஜய் என்றால் எமோஷன் என்றும் அவரது படங்கள் எப்போதுமே ரசிகர்களால் கொண்டாடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கொண்டாட்டத்திற்குரிய விஜய்: முன்னதாக விஜய்யின் லியோ, பீஸ்ட் போன்ற படங்கள் 30,000க்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் விற்பனை ஆனதை அவர் குறிப்பிட்டுள்ளார். விஜய் போன்ற கொண்டாட்டத்திற்கு உரிய நடிகர்களாக அஜித் மற்றும் ரஜினிகாந்த்தையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். தமிழில் வாழை, மகாராஜா, கேப்டன் மில்லர் உள்ளிட்ட படங்களும் ரசிகர்களின் திரையரங்க கொண்டாட்டத்திற்கு உள்ளாகிய படங்கள் என்று குறிப்பிட்டுள்ள ரேவந்த், ஆனாலும் விஜய்க்கு இருக்கும் மாஸ் எப்போதுமே மற்ற நடிகர்களுக்கு குறைவுதான் என்றும் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டில் வெளியான விஜய்யின் கில்லி ரீ-ரிலீசும் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை திரையரங்குகளுக்கு வரவழைத்ததாகவும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தை விநியோகஸ்தர்களிடமிருந்து அதிக விலை கொடுத்து வாங்கியதையும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார். விஜய், அஜித், ரஜினிகாந்த் ஆகிய நடிகர்களின் படங்கள் ஐந்து முதல் ஏழு சதவீத விலை ஏற்றத்துடன் தான் வாங்க முடியும் என்பதையும் அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.

கோட் படத்தை ரசிகர்களுக்கு சிறப்பான அனுபவமாக கொடுப்பதற்கு ரோகிணி திரையரங்கம் அடுத்தடுத்து பல விஷயங்களை திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ரோகிணி திரையரங்கத்திற்கு வரும் ரசிகர்கள் கண்டிப்பாக விஜய் படத்தை பார்த்த சிறப்பான கொண்டாட்டத்துடன் தான் வீடு திரும்புவார்கள் என்பதையும் அவர் கூறியுள்ளார்.

கோட் படத்திற்கு அதிகமான ஹைப்பை உருவாக்கவில்லை என்று முன்னதாக படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி கூறியுள்ள நிலையில், அப்படியெல்லாம் கிடையாது என்றும் கோட் படத்திற்கு மிகப்பெரிய ஹைப் காணப்படுவதாகவும் ஒரே நாளில் 20 ஆயிரததிற்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ளதாகவும் இந்த ஆண்டின் மிகப்பெரிய ப்ரீ புக்கிங் படமாக கோட் உள்ளதாகவும் கூறியுள்ளார். இன்னும் வரும் தினங்களில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் ரேவந்த் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

Exit mobile version