Site icon Tamil News

வங்குரோத்து பாதுகாப்பு கோரும் கோ ஃபெர்ஸ்ட் விமான நிறுவனம்!

இந்திய விமான சேவை நிறுவனமான கோ ஃபெர்ஸ்ட்  வங்குரோத்து பாதுகாப்பு கோரியுள்ளது.

இந்தியாவின் தேசிய கம்பனிச் சட்ட தீர்ப்பாயத்திடம் தனது வங்குரோத்து மனுவை கோ பெர்ஸ்ட் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.

மே 3 முதல் 5 ஆம் திகதிவரையான விமானப் பயணங்களை தான் இரத்துச் செய்துள்ளதாகவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

வர்த்தகர் நுஸ்லி வாடியாவுக்குச் சொந்தமான வாடியா குழுமத்தினால் கோ எயார் என்ற பெயரில் 2005 ஆம் ஆண்டு கோ பெர்ஸ்ட் நிறுவனம் ஸ்தாபிக்கப்பட்டது.

இந்திய அரசாங்க புள்ளிவிபரங்களின்படி கடந்த மார்ச் மாதம் இந்தியாவின் 5 ஆவது மிகப் பெரிய உள்ளூர் விமான சேவையாக கோ பெர்ஸ்ட் விளங்கியது. 6.9 சதவீத சந்தைப் பங்கை கொண்டிருந்தது.

அமெரிக்காவின் விமான என்ஜின் தயாரிப்பு நிறுவனமான பிராட் அன்ட் வைட்னி நிறுவனத்திடமிருந்து வழங்கப்பட்ட விமான என்ஜின்களில் ஏற்பட்ட கோளாறுகள் மற்றும் உதிரி என்ஜின்கள் முறையாக கிடைக்காதமை காரணமாக தனது விமானங்களின் அரைவாசியை தரையிறக்கி வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால் வங்குரோத்து பாதுகாப்பு அவசியமாகவுள்ளது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version