Site icon Tamil News

உலக அளவில் தீவிரமாகும் வெப்பநிலை – பூகோளம் முழுவதும் தாண்டவமாடும் சூரியன்

பூமிக் கோளத்தையே சூடு கொடுமைப்படுத்தியபடி இருக்கும் நிலையில், அதிகாரபூர்வமற்ற தகவல் ஒன்று அந்தச் சூட்டை இன்னும் ஒரு படி மேலே கொண்டுபோய் விடுகிறது.

உலக அளவில் கடுமையான வெப்ப அலை வீசுவது தொடர்பாக மைன் பல்கலைக்கழக வானியல் ஆய்வுக் குழு இதுகுறித்த அறிக்கைத் தொகுப்பை வெளியிட்டடுள்ளது. இக்குழு தொகுத்துள்ள பருவநிலை மறு ஆய்வு தரவு அறிக்கையில், செயற்கைக்கோள் தரவுகள், கணினி அலைவுகளை முதன்மையான ஆதாரமாகப் பயன்படுத்தி, உலக அளவிலான வெப்பநிலையை கணித்துள்ளனர்.

அந்த அளவீட்டின்படி இந்தக் கோளத்தில் கடந்த புதன்கிழமை பதிவான சராசரி வெப்பநிலைதான், இதுவரை மிக மிக அதிகமானது என்கிறார்கள். இந்த பூமிக் கோளத்தின் அன்றைய சராசரி வெப்பநிலை 17.18 டிகிரி செல்சியஸ் அதாவது 62.9 ஃபாரன்ஹீட் ஆகப் பதிவாகியிருந்தது. அத்துடன், கடந்த புதன்கிழமையுடன் முடிவடைந்த ஒரு வாரத்தில்தான் மிக அதிகமான வெப்பநிலையும் பதிவாகியுள்ளது என்கிறார்கள், வானியல் வல்லுநர்கள்.

அந்த வாரத்தின் பூமிக்கோள சராசரி வெப்பநிலை 0.04 டிகிரி செல்சியஸ் அல்லது 0.08 டிகிரி ஃபாரன்ஹீட் ஆகும். இது, கடந்த 44 ஆண்டுகளில் பூமியில் நிலவாத வெப்பநிலை என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், பருவநிலை தரவுகளைப் பொறுத்தவரை உயர் தரமாகக் கருதப்படும் – அமெரிக்காவின் தேசிய கடலியல், வளிமண்டலவியல் ஆய்வு நிறுவனம், இந்த அதிர்ச்சித் தகவல் பற்றி கருத்து எதையும் தெரிவிக்காமல் ஒதுங்கிக்கொண்டது.

என்.ஓ.ஏ.ஏ. எனப்படும் அமெரிக்க தேசிய கடலியல், வளிமண்டலவியல் ஆய்வு நிறுவனம், பொதுவாக, உலகளாவிய வெப்பநிலைப் பதிவுகளை அதுவும் மாதாந்திர, வருடாந்திர அடிப்படையில் மட்டுமே கண்காணிக்கும்; அன்றாட வெப்பநிலையை அது கணக்கிடுவது இல்லை. ஆனாலும், அண்மைக் காலமாக அதிகரித்துவரும் வெப்பநிலை உயர்வை என்.ஓ.ஏ.ஏ. கவலையோடுதான் அணுகுகிறது.

“பூமியில் இப்போதைய காலகட்டத்தில் நாம் வெப்பமான கட்டத்தில் இருக்கிறோம் என்பதில் எந்த மாறுபாடும் இல்லை. எல்நினோ விளைவுகளும் வெப்பநிலை அதிகரிப்பும் ஒருசேரக் கைகோத்துவிட்டன. உலகின் பல நாடுகளில் மேற்பரப்பு வெப்பநிலை மிக அதிகமாகப் பதிவாகிவருவதை கவனித்துக்கொண்டுதான் வருகிறோம்.” என்றும் அந்த அமைப்பின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐநா பொதுச்செயலாளர் அண்டோனியா குட்டரெஸ்கூட, இதுபற்றி கூறுகையில், அண்மையில் கிடைத்துள்ள விவரங்கள், பருவநிலை தப்புதலானது கட்டுக்கடங்காமல் போய்விட்டதை உணர்த்துகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version