Site icon Tamil News

ஜெர்மனியில் பிரபலமடைந்த 49 யூரோ பயண அட்டை – பாவனையில் இருந்து நிறுத்தப்படும் அபாயம்

ஜெர்மனியில் பிரபலமடைந்த 49 யூரோ பயண அட்டை பானையில் இருந்து நிறுத்தப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஜெர்மனி நாட்டில் தற்பொழுது பாவணையில் இருக்கின்ற 49 யுரோ பயண அட்டை 2024 ஆம் ஆண்டு பாவணையில் இருக்குமா..? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஜெர்மனியில் கடந்த மே மாதம் முதல் டொஷ்லான் என்று சொல்லப்படுகின்ற 49 யுரோ பயண அட்டையானது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் 2024 ஆம் ஆண்டு பயண அட்டைக்குரிய நிதியம் பற்றி சந்தேகங்கள் எழுந்துள்ளன.

அதாவது நோற்றின்பிஸ்பாலின் மாநில போக்குவரத்து அமைச்சர் வொர்கன் கேட்ச் அவர்களின் கருத்தின் படி மாநிலம் மற்றும் மத்திய அரசாங்கமானது இந்த விடயத்தில் எவ்வாறு நிதி ஒதுக்கீடு செய்வது தொடர்பான ஒரு சமரசத்துக்கு வர முடியாது விட்டால் 2024 ஆம் ஆண்டு இவ்வகையான பயண அட்டையானது நடைமுறைக்கு கொண்டு வருவது சந்தேகத்துக் குரிய விடயம் என்று அவர் தெரிவித்து இருக்கின்றார்.

Exit mobile version