Site icon Tamil News

ஜேர்மனியின் புதிய குடியேற்றச் சட்டம் : வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான அறிவிப்பு

ஜேர்மனியின் குடிவரவு சட்ட சீர்திருத்தங்கள் இந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் மூன்று கட்டங்களாக அறிமுகப்படுத்தப்படும்.

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியே உள்ள திறமையான தொழிலாளர்கள் ஜெர்மனிக்கு செல்வதை எளிதாக்கும் புதிய சட்டத்தின் முதல் கட்டங்கள் நவம்பரில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜேர்மன் அரசாங்கம் இந்த ஆண்டு ஜூலை மாதம் சட்டத்திற்கான இறுதி ஒப்புதலை வழங்கியது. நவம்பர் 2023, மார்ச் 2024 மற்றும் ஜூன் 2024 ஆகிய மூன்று படிகளில் இது நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய சட்டம் திறமையான வெளிநாட்டு தொழிலாளர்களை ஈர்ப்பது மற்றும் நாட்டில் தொழிலாளர் பற்றாக்குறையை எதிர்த்துப் போராடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Exit mobile version