Site icon Tamil News

ஜெர்மனியில் அதிகரிக்கும் உதவித் தொகை – வெளியான மகிழ்ச்சி தகவல்

ஜெர்மனியில் தமிழர்கள் உட்பட உதவித் தொகை பெரும் அனைவருக்கும் மகிழ்ச்சியான தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

ஜெர்மனியில் 2024 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் இருந்து குழந்தைகளுக்கான பராமரிப்பு பணத்தினுடைய அளவுகள் அதிகரிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

நோற்றின்பிஸ்பாலின் மாநிலத்தில் டிஸில்டோஃவெட் டபேல் என்று சொல்லப்படுகின்ற இந்த புதிய திட்டத்தின் அடிப்படையில் 6 வயதுக்கு உட்பட்ட சிறுவர் சிறுமிகளுக்கு அதாவது தனி நபருக்கு இதுவரை காலமும் 437 யுரோ பராமரிப்பு பணமாக வழங்கப்பட்டு இருந்தது.

ஆனால் 2024 ஆம் ஆண்டு தொடக்கம் இந்த பராமரிப்பு பணமானது 480 ஆக உயர்வரைகின்றது. 6 வயதுக்கும் 12 வயதுக்கும் இடைப்பட்டவர்களுக்கு எதிர் வரும் காலங்களில் 551 யூரோ வழங்கப்படும்.

12 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு 681 யூரோக்களாக உயர்வடைகின்றது. இந்நிலையில் பல்கலைகழகங்களில் கல்வி கற்கின்ற மாணவர்களுக்கு இவ்வாறு பராமரிப்பு பணமானது 930 யூரோவாக உயர்வடைவதாக தெரியவந்துள்ளது.

Exit mobile version