Site icon Tamil News

ஜெர்மனியில் இதுவரை இல்லாத அளவு பாதிப்பு – வெளியான அதிர்ச்சி தகவல்கள்

ஜெர்மனியில் இதுவரை இல்லாத அளவிற்கு தற்பொழுது குடும்ப வன்முறைகள் அதிகரித்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் 80 வீதமான பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளி விபரம் வெளியாகியுள்ளது. ஜெர்மனியில் குடும்பங்களுக்க இடையேயான வன்முறைகள் அதிகரிக்கப்படுவதாக ஜெர்மனியின் உள் ஊர் அமைச்சு வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மட்டும் இவ்வகையான குடும்பங்களுக்கு இடையேயான வன்முறைகள் 10 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், இவ்வாறு அதிகரிக்கப்பட்டவர்களில் பாதிக்கப்பட்டவர்களில் பெண்களுடைய தொகை 80 சதவீதமாக உள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த வன்முறைகளின் குற்றவாளிகள் 78 சதவீதம் ஆண்கள் என்றும் புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 2022 ஆம் ஆண்டு 2021 ஆம் ஆண்டு உடன் ஒப்பிடும் பொழுது இந்த சம்பவங்கள் 10 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும்,

மொத்தமாக 2022 ஆம் ஆண்டு குடும்பங்களுக்கிடையே ஏற்பட்ட வன்முறையானது 1 57550 சம்பவங்களாக பதிவாகியுள்ளது. இந்நிலையில் நாள் ஒன்றுக்கு இவ்வகையான குடும்பங்களுக்கு இடையேயான வன்முறைகளின் எண்ணிக்கையானது 432 ஆக உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

பாலியல் வன்முறையானது 2021 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் பொழுது 2022 ஆம் ஆண்டு 20 சதவீதமாக உயர்வடைந்துள்ளதாகவும் இந்த புள்ளி விபரம் சுட்டிகாட்டியுள்ளது.

இதன் காரணத்தினால் ஜெர்மனியின் உள் ஊர் ஆட்சி அமைச்சானது இந்த விடயம் தொடர்பில் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

Exit mobile version