Site icon Tamil News

ஜேர்மன்- பெர்லினில் முக்கிய ரயில் பாதையின் பல இடங்களில் பற்றியெறிந்த தீ

ஜேர்மன் தலைநகரான பெர்லினுடன் ஹாம்பர்க் நகரை இணைக்கும் ரயில் பாதையில் பல இடங்களில் தீப்பற்றியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜேர்மனியின் ஹாம்பர்க் நகரை பெர்லினுடன் இணைக்கும் முக்கிய ரயில் பாதையில் மூன்று இடங்களில் தீப்பற்றியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், யாரோ வேண்டுமென்றே தீவைத்துள்ளது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளதுடன், இதன் பின்னணியில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது ஒரு வகையான தீவிரவாதம் என்று கூறியுள்ள ஜேர்மன் போக்குவரத்துத் துறை அமைச்சரான Volker Wissing, இந்த மோசமான செயலால் பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படாதது அதிர்ஷ்டம்தான் என்று கூறியுள்ளார்.சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கிடையில், 2017ஆம் ஆண்டு, ஜேர்மனியின் ஹாம்பர்க் நகரில் G 20 மாநாடு நடைபெறுவதற்கு முன், இதேபோல ரயில் பாதையில் 12 இடங்களில் தீவைப்பு சம்பவங்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version