Site icon Tamil News

ஹமாஸ் தாக்குதலில் பலியான 9 இஸ்ரேலிய வீரர்கள்

காஸாவில் நடந்த கடும் சண்டையில் இரண்டு மூத்த தளபதிகள் மற்றும் பல அதிகாரிகள் உட்பட 09 இஸ்ரேல் பாதுகாப்பு படை வீரர்கள் கொல்லப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தரைப்படை தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 115 ஆக அதிகரித்துளளது.

களச்சோதனையில் இருந்த 4 வீரர்கள் தொலைந்ததையடுத்து அவர்களைப் பின்தொடர்ந்து சென்ற இஸ்ரேலிய வீரர்கள் மீது மறைந்திருந்து ஹமாஸ் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த சண்டையில் எத்தனை அதிரடிப்படையினர் கொல்லப்பட்டனர் என்ற குறிப்பை ராணுவம் அறிவிக்கவில்லை. அதேசமயம் போர் குறித்து ஹமாஸ் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version