Site icon Tamil News

தலைமை பயிற்சியாளர் பதவிக்கு அதிக சம்பளம் கோரிய கவுதம் கம்பீர்

டி20 உலக கோப்பையுடன் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட்டின் பதவி காலம் முடிவடைந்த நிலையில் இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ராகுல் டிராவிட் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ஆண்டுக்கு 12 கோடி ரூபாய் சம்பளம் வாங்கினார்.

இந்த சம்பளத்தை விட கூடுதலாக தமக்கு வேண்டும் என கம்பீர் கேட்டு இருக்கிறார். இதனால்தான் அவரை நியமிப்பதில் தாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில் கவுதம் கம்பீருக்கு எவ்வளவு சம்பளம் மட்டும் சலுகைகள் குறித்த விவரம் வெளியாகி உள்ளது.

அந்த வகையில் அவருக்கு ஆண்டுக்கு 12 கோடியை விட அதிக சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் வெளிநாட்டில் சுற்றுப்பயணம் சென்றால் நாள் ஒன்றுக்கு தினப்படியாக 21 ஆயிரம் வழங்கபட உள்ளது.

இதை தவிர வெளிநாட்டிற்கு சென்றால் 5 ஸ்டார் ஹோட்டலில் தங்கும் வசதியும் மற்றும் சலவை செலவுகள் ஆகியவற்றிற்கும் பணம் வழங்கப்படுகிறது.

கம்பீர் மூன்றரை ஆண்டுகளுக்கு இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version