Site icon Tamil News

ஜெர்மனியில் பண இயந்திரங்களை தகர்க்கும் கும்பல் – பல லட்சம் யூரோ திருட்டு

ஜெர்மனியில் அண்மைகாலங்களாக பண இயந்திரங்களை குண்டு வைத்து தகர்த்து பணத்தை கொள்ளையிட்டு செல்லுகின்ற சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றது.

இந்த கொள்ளை சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிரத்தை காட்டிய பொழுதிலும் இயந்திரங்கள் தகர்க்கப்பட்டு பணம் கொள்ளையடிப்பது மேலும் அதிகரித்தே காணப்படுகின்றது.

21 ஆம் திகதி டிசம்பர் மாதம் ஜெர்மனியின் லன்கிறிஸ்ட் சாடன் என்று சொல்லப்படுகின்ற ஷ்டாடா மாவட்டத்தில் ஒரு வங்கியின் இயந்திரத்தின் மீது குண்டு தாக்கல் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த குண்டு தாக்குதல் நடைபெற்ற பிறகு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள கட்டிடத்துக்கு 1 லட்சம் யுரோக்கு மேற்பட்ட சேதம் ஏற்பட்டதாக தெரியவந்து இருக்கின்றது.

இந்நிலையில் பண இயந்திரம் குண்டு வைத்து தகர்க்கப்பட்ட விடயத்தில் இயந்திரம் உடைந்ததால் பல ஆயிரக்கணக்கான யுரோக்கள் வீதியில் கிடந்ததாகவும் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைக்கபெற்றதை அடுத்து உடனடியாக விரைந்து இந்த பணங்களை பெற்றுக்கொண்டதாக தெரியவந்துள்ளது.

மேலும் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுப்பட்ட கொள்ளை கும்பல் பற்றிய தகவலை வழங்குமாறு குறித்த பிரதேசத்துக்கான பொலிஸார் பொது மக்களிடம் இருந்து உதவிகளை கேட்டுகொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Exit mobile version