Site icon Tamil News

இந்தியாவிற்கு விஜயம் செய்யும் ஜோ பைடன்! பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

இந்தியாவில் நடைபெறும் ஜி 20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோபைடன் நாளை டெல்லிக்கு வருகை தரவுள்ளார்.

இந்தியாவில் முதன் முறையாக ஜி20 மாநாடு நடைபெறுகிறது. இதில், அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய‌ நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

இது தவிர சிறப்பு அழைப்பாளர்களாக வங்கதேசம், எகிப்து, மொரிசியஸ், நெதர்லாந்து, நைஜீரியா, ஓமன், சிங்கப்பூர், ஸ்பெயின் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளின் தலைவர்களும் பங்கேற்கின்றனர். இந்த கூட்டத்தில் ரஷ்ய அதிபர் புதின் கலந்துக்கொள்ளவில்லை என்பதை பிரதமர் மோடியிடம் தொலைபேசி மூலம் தெரிவித்து விட்டார்.

சீன அதிபரும் இந்த மாநாட்டில் பங்கேற்கமாட்டார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜி ஜின்பிங்குக்கு பதில் சீன பிரதமர் லி கியாங் தலைமையில் சீனக்குழு பங்கேற்கிறது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் இடையேயான இரு தரப்பு பேச்சுவாா்த்தை நாளை செப்டம்பர் 8ம் திகதி நடைபெறுகிறது. தொடா்ந்து, செப். 9, 10 ஆகிய திகதிகளில் நடைபெறும் ‘ஜி-20’ உச்சிமாநாட்டு அமா்வுகளில் அவா் பங்கேற்பாா்.

ஜனாதிபதி ஜோ பைடனின் இந்த பயணத்தில் முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் உள்பட அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் அனைத்து வழிக்காட்டுதல்களும் முறையாக பின்பற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version