Tamil News

கடலில் திறந்து விடப்படவுள்ள புகுஷிமா அணு உலை கழிவுநீர் – பிரதமர் அறிவிப்பு

An aerial photo shows Fukushima No. 1 nuclear power plant in Okuma town, Fukushima Prefecture on April 7, 2021. The sapace for contaminated water tanks is running out in the near future. ( The Yomiuri Shimbun via AP Images )

ஜப்பானில் கடந்த 2011ம் ஆண்டு மார்ச் 11ம் திகதி சுனாமி தாக்கியபோது உலகிலேயே பாதுகாப்பான அணு உலையாகக் கருதப்பட்ட புகுஷிமாவின் டாய்ச்சி அணு உலைக்குள் கடல்நீர் புகுந்தது.

இதில் மின்சாரம் உற்பத்தி செய்யும் ஜெனரேட்டர்கள் செயலிழந்து உலைகளை குளிர்விக்க மின்சாரம் இல்லாமல் போனது. இதனால் 6 யூனிட்களில் 3 யூனிட்கள் சேதம் அடைந்து, சுற்றியுள்ள பகுதிகளில் கதிர்வீச்சு தாக்கியது. இந்த விபத்து நிகழ்ந்து 12 ஆண்டுகள் கடந்தும், அந்த உலையில் இன்னும் கதிர்வீச்சின் தாக்கம் இருப்பதாக கூறப்படுகிறது.

இதனிடையே புகுஷிமா அணு உலையில் உள்ள அணு கழிவுகளை பாதுகாப்பாக அகற்றிவிட்டு அந்த அணுஉலையை முழுமையாக செயலிழக்கச் செய்யும் பணிகளில் டெப்கோ என்ற நிறுவனம் ஈடுபட்டுள்ளது. அந்த வகையில் புகுஷிமா அணு உலையில் அணு கழிவுகள் நிறைந்த சுமார் 10 லட்சம் மெட்ரிக் டன் கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு ஆலையின் அருகில் உள்ள மிகப்பெரிய தொட்டிகளில் பாதுகாப்பாக சேகரித்து வைக்கப்பட்டுள்ளது.

Japan's Fukushima water release plan fuels fear despite IAEA backing

அணு கழிவுகள் அகற்றப்பட்ட இந்த கழிவு நீரை கடலில் திறந்துவிடும் திட்டத்தை ஜப்பான் அரசு நீண்டகாலமாக பரிசீலித்து வருகிறது. ஆனால் இந்த திட்டத்துக்கு மீனவர்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சீனாவும் எதிர்ப்பு தெரிவிக்கிறது.

பலகட்ட ஆய்வுக்கு பிறகு அணு கழிவுகள் அகற்றப்பட்ட கழிவு நீரை கடலில் திறந்துவிடும் திட்டத்துக்கு ஜப்பானின் அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் வழங்கியது. ஜப்பானின் இந்த திட்டம் குறித்து சர்வதேச அணுசக்தி முகமையும் திருப்தி அடைந்தது.

இதையடுத்து கழிவு நீரை ஆலையில் இருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் உள்ள பசிபிக் பெருங்கடலில் கடலுக்கு அடியில் ஒரு சுரங்கப்பாதை மூலம் வெளியேற்றுவதற்கான நடைமுறைகளை ஜப்பான் அரசு தொடங்கியது.

இந்நிலையில், அணு கழிவுகள் நீக்கப்பட்ட கழிவு நீரை வரும் 24ம் திகதி முதல் படிப்படியாக வெளியேற்ற உள்ளதாக ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா அறிவித்துள்ளார். இன்று நடைபெற்ற அமைச்சர்கள் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கியோடோ நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. ஆலையில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் கழிவு நீரை முழுமையாக திறந்து விடுவதற்கு பல ஆண்டுகள் ஆகும்.

Exit mobile version