Site icon Tamil News

கிரிக்கெட் முதல் பேஸ்பால் வரை! ஒலிம்பிக்கில் இணையும் புதிய விளையாட்டுகள்

கடந்த இரண்டு வாரங்களாக பாரிஸில் நடைபெற்று வந்த 2024 ஒலிம்பிக் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவுக்கு வந்துள்ளது. அடுத்த ஒலிம்பிக் போட்டிகள் லாஸ் ஏஞ்சல்ஸில் 2028ம் ஆண்டு நடைபெற உள்ளது. இங்கு ஏற்கனவே 1932 மற்றும் 1984 ஆகிய ஆண்டுகளில் இரண்டு முறை நடைபெற்றுள்ளது.

நடந்து முடிந்த பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் பல அசாதாரணமான நிகழ்வுகள் நடைபெற்றன. பல பழைய ரெக்கார்டுகள் உடைக்கப்பட்டு, புதிய சாதனைகளும் படைக்கப்பட்டன. மேலும் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது இந்த பாரிஸ் ஒலிம்பிக்ஸ்.

4 வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்படும் ஒலிம்பிக் போட்டிகளில் சில புதிய விளையாட்டுகள் சேர்க்கப்படுகின்றன மற்றும் பழைய போட்டிகள் நீக்கப்படுகின்றன.

பாரிஸ் ஒலிம்பிக்கில் பிரேக் டான்சிங் என்ற புதிய விளையாட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில் 2028 ஒலிம்பிக்கில் 6 புதிய விளையாட்டு அறிமுகமாக உள்ளது. அதே சமயம் 2 விளையாட்டுகள் நீக்கப்படும்.

இந்த ஆண்டு சேர்க்கப்பட்ட பிரேக்டான்ஸ் 2028 ஒலிம்பிக்கில் சேர்க்கப்படாது. அதேசமயம் குத்துச்சண்டை கூட கைவிடப்படலாம். குத்துச்சண்டை ஒலிம்பிக்கில் இருக்குமா அல்லது இருக்காதா என்பது குறித்து உறுதிப்படுத்த IBA க்கு 2025 வரை காலக்கெடு உள்ளது.

அமெரிக்காவில் பிரபலமான Flag football மற்றும் இங்கிலாந்தில் பிரபலமாக உள்ள ஸ்குவாஸ் போன்ற விளையாட்டுகள் அறிமுகமாக உள்ளது. மேலும், பேஸ்பால் மற்றும் சாப்ட்பால் இடம் பெற உள்ளது.

1908ம் ஆண்டு நடைபெற ஒலிம்பிக் போட்டிகளில் பிரபலமாக இருந்த லாக்ரோஸ் மீண்டும் ஒலிம்பிக்கில் இடம் பெற உள்ளது. அனைவரும் எதிர்பார்த்த கிரிக்கெட் 2028 ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடப்படும்.

Exit mobile version