Site icon Tamil News

அதிவேக நெடுஞ்சாலை சாரதிகளுக்கு இலவச தேநீர்: ஒடிசா மாநில அரசு முடிவு

இந்தியாவில் ஒடிசா மாநில அரசு சாலை விபத்துகளைக் குறைக்க ஒரு தனித்துவமான திட்டத்தைத் தொடங்கியுள்ளது.

அதன்படி, தபாஸ் அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகனங்களின் சாரதிகளுக்கு அதிகாலை 3.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இலவச தேநீர் விநியோகிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

மேலும் நீண்ட தூரம் செல்லும் வாகனங்கள் மற்றும் இரவில் செல்லும் வாகனங்களில் ஏற்படும் விபத்துகளுக்கு தூக்கம் மற்றும் சோர்வு தான் முக்கிய காரணம் என்றும் கண்டுபிடித்துள்ளனர்.

அதன்படி, மாநிலத்தில் ஜனவரி 1 முதல் ஜனவரி 7 வரை சாலை பாதுகாப்பு வார விழா நடத்தப்படும் என அறிவிக்க அரசு முடிவு செய்துள்ளது.

இந்த திட்டத்திற்கு சாலை பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் அரசு சாரா நிறுவனங்களின் ஆதரவையும் எதிர்பார்க்கின்றனர்.

Exit mobile version