Site icon Tamil News

உக்ரைன் இராணுவத்தில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக மோசடி!

உக்ரைன் இராணுவத்தில் வேலைவாய்ப்பை பெற்று தருவதாக கூறி மனித கடத்தலில் ஈடுபட்ட இலங்கையை சேர்ந்த கணவன் மனைவி தம்பதியரை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வந்து இன்று வர்த்தக, ஆட்கடத்தல் விசாரணை மற்றும் கடல்சார் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைத்ததன் பின்னர் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகத்திற்குரிய தம்பதியினர் கடவத்தை பிரதேசத்தில் வசித்து வருவதுடன், அவர் தொழில் ரீதியாக பொருளாதார ஆசிரியர் ஆவார்.

உக்ரைன் ராணுவத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி இந்த நாட்டை விட்டு 55 பேர் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர்களில் இராணுவத்தில் கடமையாற்றிய ஒரு குழுவும் அடங்குவதாகவும், உக்ரைன் இராணுவத்தில் கப்டனாக கடமையாற்றிய ரனிஷ் ஹெவெகேவின் ஒருங்கிணைப்புடன் குறித்த குழுவை உக்ரைனுக்கு அனுப்ப சந்தேகநபர்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இலங்கையில் இருந்து வெளியேறும் நபர்கள் இந்தியா வழியாக போலந்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு பின்னர் உக்ரைனுக்குள் நுழைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. அப்படி அனுப்பிய ஒருவரிடம் இருந்து கடத்தல்காரர்கள்   2 முதல் 5 லட்சம் வரை வசூலித்துள்ளனர்.

நாட்டை விட்டு வெளியேறியவர்களில் சிலர் உக்ரைன் சென்றுள்ளனர், போலந்துக்குள் செல்ல முடியாமல் நாடு திரும்பியவர்களும் உள்ளனர்.

மற்றுமொரு குழு அஜர்பைஜானுக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் அவர்கள் தொடர்பில் எவ்வித தகவலும் இல்லை என புலனாய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

உக்ரைன் இராணுவத்தில் பணியாற்றச் சென்றவர்களில் மூவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குற்றப் புலனாய்வுப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர்  ரொஹான் பிரேமரத்னவின் பணிப்புரைக்கமைய, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்  சமரகோன் பண்டாவின் தலைமையில் மனித கடத்தல், கடத்தல் விசாரணை மற்றும் கடல்சார் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version