Site icon Tamil News

சீனாவில் 26வது மாடியில் இருந்து கீழே குதித்து உயிர்பிழைத்த நான்கு வயது குழந்தை

சீனா,ஹுனான் மாகாணத்தைச் சேர்ந்த நான்கு வயதுக் குழந்தை,தனது வீட்டில் இருந்து கீழே குதித்து கை மற்றும் பல எலும்பு முறிவுகளுடன் உயிர் பிழைத்துள்ளார்.

சீன ஊடகத்தின் படி, சிறுவன் தான் பார்த்த கார்ட்டூனில் இருந்து ஒரு காட்சியைப் பின்பற்ற முயன்றுள்ளார்.

சம்பவம் நடந்த அந்த நேரத்தில் அவரது பெற்றோர் வீட்டில் இல்லை,

சிறுவன் எடை குறைவாக இருந்ததால், குடையால் அவனது வீழ்ச்சி மெதுவாகத் தெரிந்தது, மேலும் அவன் விழுந்தபோது சில மரங்களால் காப்பாற்றப்பட்டான்.

அவர் தற்போது உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார், அங்கு அவரது உடல்நிலை சீராக உள்ளது.

டாம் அண்ட் ஜெர்ரியை பார்த்துவிட்டு சிறுவன் குதித்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

குடையுடன் குதித்தால் பத்திரமாக தரையிறங்க முடியும் என்று அவர் நினைத்ததாக கூறப்படுகிறது.

அவரது வீட்டின் பால்கனியில் திருட்டு தடுப்பு பாதுகாப்பு வலைகள் பொருத்தப்படாததால், அவர் எளிதாக அணுகி அதிலிருந்து குதித்தார்.

Exit mobile version