Site icon Tamil News

இந்திய எல்லைக்கு அருகில் கைது செய்யப்பட்ட பங்களாதேஷ் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி

வங்கதேசத்தில் கடந்த மாதம் மாணவர்கள் போராட்டம் நடத்தினர்,இந்த போரட்டம் கலவரமாக மாறி ஆட்சியை கவிழ செய்தது.

இந்த போராட்டம் சுமார் ஒரு மாதம் வரை நீடித்தது. இதன் காரணமாக இந்த மாதம் 5ந்தேதி ஷேக் ஹசீனா தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.

இந்நிலையில் வங்கதேச முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ஷம்சுதீன் சௌத்ரி மாணிக், இந்தியாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற போது எல்லை காவல் படையினரால் கைது செய்யப்பட்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

அவாமி லீக் கட்சியின் தலைவர் பிரோஸ் இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்ட சில மணிநேரத்திற்கு பின்னர் இந்த தகவல் வெளியாகியது.

ஷேக் ஹசீனா அமைச்சரவையில் முக்கிய பொறுப்பு வகித்தவர்கள் பலர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version