Site icon Tamil News

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு படையெடுக்கும் வெளிநாட்டவர்கள்

அகதிகள் விவகாரம் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் பாரிய நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.

மத்திய தரை கடல் பிரதேசத்தில் ஊடாக பல்லாயிரக் கணக்கான அகதிகள் ஜெர்மனி உட்பட ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு படையெடுத்து வருகின்றார்கள்.

இவ்வாறு மத்திய தரை கடல் பிரதேசத்தின் ஊடாக அகதிகள் வருவதை கட்டுப்படுத்துவதற்காக ஐரோப்பிய ஒன்றியமானது ஆப்பிரிக்க நாடான டிறினிசியாவுடன் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.

அதாவது டிறினிஸியாவிற்கு 100 மில்லியன் யுரோக்களை ஐரோப்பிய ஒன்றியம் வழங்க உள்ளது.

இவ்வாறு இந்த பணத்தை வழங்குவதன் மூலம் டிறினிசியன் நாடானது அந்த நாட்டில் இருந்து மத்திய தரை கடல் பிரதேசத்தின் ஊடாக ஐரோப்பாவிற்கு வருகின்ற அகதிகளை கட்டுப்படுத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

டிறினிஸியாவிற்கு மொத்தமாக 900 மில்லியன் யுரோக்கள் தேவைப்படுவதாயின் அதேவேளையில் இப்பொழுது 100 மில்லியன் யுரோக்களை வழங்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் இணங்கியுள்ளமை தெரியவந்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பில் ஐரோப்பிய ஒன்றியம் கொமிஷன் தலைவியான வொன்டே லயன் மற்றும் போலாந்து நாட்டினுடைய பிரதமர், இத்தாலியுடைய பிரதமர் கையளித்து இட்டதாகவும் டிறினிஸியா நாட்டின் சார்பில் அந்நாட்டு ஜனாதிபதி கையப்பம் இட்டதாகவும் தெரியவந்துள்ளது.

எதிர்வரும் காலங்களில் மத்திய தரை கடல் பிரதேசத்தில் ஊடாக ஐரோப்பிய நாட்டுக்குள் வரும் அகதிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியும் என நம்பப்படுகின்றது.

Exit mobile version