Site icon Tamil News

ஜெர்மனியில் காற்பந்துப் போட்டி – சட்டவிரோதமாக நுழைந்த ஆயிரக்கணக்கானோர்

ஜெர்மனியில் 1,400 பேர் நாட்டுக்குள் சட்டவிரோதமாக நுழைந்துள்ளனர்.

EURO 2024 காற்பந்துப் போட்டி தொடங்குவதற்கு முந்திய ஒரு வாரத்தில் இவர்கள் நுழைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

எல்லைப் பாதுகாப்பு வலுப்பட்டதால் சுமார் 1,000 பேர் உள்ளே வராமல் தடுக்கப்பட்டுள்ளனர்.

காற்பந்துப் போட்டி நடைபெறும்போது பாதுகாப்பை உறுதிப்படுத்த தினமும் 22,000 பொலிஸார் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

டென்மார்க், பிரான்ஸ், பெல்ஜியம், நெதர்லந்து, லக்ஸம்பர்க் ஆகியவற்றுடன் இருக்கும் ஜெர்மனி எல்லையை மக்கள் சுதந்திரமாகக் கடக்க அனுமதி உண்டு. ஆனால் காற்பந்துப் போட்டி முடிவடையும்வரை தற்காலிகக் கட்டுப்பாடு உள்ளது. அங்கு விமான நிலையத்திலும் துறைமுகத்திலும் சோதிக்கப்பட்ட பின்னரே மக்கள் உள்ளே வர முடியும்.

ஜூன் 14 ஆம் திகதி தொடங்கி ஜூலை 14ஆம் திகதி வரை நடைபெறும் இந்த நிகழ்வை நடத்துவதற்கு நாடு தயாராகி வருவதால், சாத்தியமான பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்த அதிக கவலைகளுக்கு மத்தியில் இவ்வாறு நுழைந்துள்ளனர்.

Exit mobile version