Site icon Tamil News

இலங்கையில் உணவுப் பற்றாக்குறையா? மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

விவசாயிகளின் ஒத்துழைப்புடன் நாட்டில் மேலதிக அரிசி கையிருப்பைப் பேண முடிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கால்நடை வளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டீ. பி. ஹேரத் இதனை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் நாட்டிற்கு தேவையான மொத்த அளவில் 40 சதவீதமான பால் இதுவரையான காலமும் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள நிலையில் அதனை இரட்டிப்பாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் உணவு தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. விவசாய அமைச்சரினதும் விவசாயிகளினதும் ஒத்துழைப்புடன் அரிசியில் தன்னிறைவை அடைந்து, மேலதிக அரிசி உற்பத்தியைப் பேண முடிந்துள்ளது.

எனவே, எதிர்காலத்தில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் என்ற தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை. கால்நடை அமைச்சும் மக்களுக்கு தேவையான அளவு புரதத்தை வழங்கக்கூடிய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது.

கடந்த காலத்தில், 40 சதவீதமான பால் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டது. இந்தநிலையைக் கருத்தில் கொண்டு பால் உற்பத்தியை இரட்டிப்பாக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

மேய்ச்சல் தரைகளை மேம்படுத்தவும் ஊட்டச்சத்து நிலையை அதிகரிக்கவும், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கால்நடை வளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டீ.பி. ஹேரத் தெரிவித்துள்ளார்.

Exit mobile version