Tamil News

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு விமான சேவை ஆரம்பம்: வெளியான கட்டண விபரங்கள்

யாழ்ப்பாணத்திற்கான உள்நாட்டு விமான சேவைகள் எதிர்வரும் ஜூலை மாதம் ஆரம்பிக்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

டிபி ஏவியேஷன் இந்த சேவைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்

ரத்மலானை விமான நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்கான விமான சேவை எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் மாதங்களில் மேலும் உள்நாட்டு இடங்களுக்கு சேவைகளை விரிவுபடுத்துவதற்காக டிபி ஏவியேஷன் உடன் நெருக்கமாக பணியாற்றுவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

உள்நாட்டு விமான சேவைகள் தொடர்பாக டிபி Aviation வெளியிட்டுள்ள விளம்பரத்தில், இரத்மலானை விமான நிலையத்தில் இருந்து 70 நிமிடங்களில் பயணிகள் யாழ்ப்பாணத்தை அடைய முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.


யாழ்ப்பாணம் செல்வதற்கு ஒருவழிப் பயணத்திற்கு 22,000 ரூபாவும் இருவழிப் பயணத்திற்கு 41,500 ரூபாவும் செலவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்திற்கு வாராந்தம் நான்கு விமான சேவைகள் இடம்பெறும் எனவும் பயணிகள் 07 கிலோகிராம் பொருட்களை எடுத்துச் செல்ல முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version