Site icon Tamil News

சென்னையில் இருந்து குவைத் செல்லும் விமானம் புறப்படுவதில் தாமதம்!

சென்னை விமான நிலையத்தில் இருந்து குவைத்துக்கு செல்லும் பயணிகள் விமானத்தில் தொழிநுட்ப கோளாறு ஏற்பட்டதால் பயணத்தை மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

குறித்த விமானம் இன்று (16.07) அதிகாலை 2 மணிக்கு புறப்பட தயாராக இருந்தது. அதில் பயணம் செய்ய சுமார் 150 பயணிகள் தயார் நிலையில் இருந்தனர்.

இன்று மதியம் 12 மணி வரை விமானத்தில் தொழில் நுட்பகோளாறு சரி செய்யப்படாததால் விமானம் புறப்படுவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டது.

மேலும் பயணிகளுக்கு முறையான அறிவிப்பு மற்றும் உணவு ஏற்பாடுகள் செய்யப்படாததால் கடும் அவதி அடைந்தனர்.

12 மணிநேரத்துக்கும் மேல் காத்திருந்த பயணிகள் விமானநிறுவன ஊழியர்களுடன் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

Exit mobile version