Site icon Tamil News

நிலையான பணவீக்கம், அதிக வட்டி விகிதங்கள்  போன்றன உலக பொருளாதாரத்தை பாதிக்கும் என முன்னறிவிப்பு!

நிலையான பணவீக்கம், அதிக வட்டி விகிதங்கள்  போன்றன உலகப் பொருளாதாரத்தை பாதிக்கும் என்று OECD கணித்துள்ளது.

பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டிற்கான பாரிஸை தளமாகக் கொண்ட அமைப்பின் சமீபத்திய பொருளாதாரக் கண்ணோட்டத்தின் அடிப்படையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

38 உறுப்பு நாடுகளைக் கொண்ட குறித்தக் குழு, இந்த ஆண்டு அதன் வளர்ச்சி முன்னறிவிப்பை நவம்பரில் 2.2% இல் இருந்து 2.7% ஆக உயர்த்தியது. அதேநேரம்  அடுத்த ஆண்டு 2.9% ஆக ஒரு சிறிய முடுக்கத்தை மட்டுமே முன்னறிவித்தது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு, கொவிட் 19 தாக்கம் மற்றும் எரிசக்தி விலை  ஆகியவையால் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில்,  வளரும் நாடுகளில் கடன் பிரச்சனைகள் மற்றும் விரைவான வட்டி விகித உயர்வுகள் போன்றவை பொருளாதார வளர்ச்சிக்கான கடினமான பாதையாக காணப்படுகிறது.

Exit mobile version