Tamil News

மட்டிக்கழி அருள்மிகு திரௌபதா தேவியம்மன் ஆலயத்தின் தீ மிதிப்பு திருப்பள்ளயச்சடங்கு

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு மட்டிக்கழி அருள்மிகு திரௌபதா தேவியம்மன் ஆலயத்தின் தீ மிதிப்பு திருப்பள்ளயச்சடங்கு நேற்று மாலை வெகுவிமர்சையாக நடைபெற்றது.

கடந்த பத்து தினங்களாக நடைபெற்றுவந்த ஆலயத்தின் வருடாந்திர உற்சவத்தில் கடந்த வியாழக்கிழக்கிமை அம்பாளுக்கு கலியாணக்கால் வெட்டும் நிகழ்வு நடைபெற்றது.

தினமும் சிறப்பு பூஜைகளும் நிகழ்வுகளும் நடைபெற்றுவந்த நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை அம்பாளுக்கு தீபாராதனை நிகழ்வுகள் நடைபெற்றன.

பூஜையினை தொடர்ந்து அம்பாளும் பஞ்சபாண்டவர்களும் புடை சூழ மட்டக்களப்பு வாவியில் மஞ்சல்குளிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து ஆலயத்திற்கு வருகைதந்த பஞ்சபாண்டவாகள் மற்றும் அம்பாள் ஆயிரக்கணக்கான அடியார்கள் மத்தியில் மூட்டப்பட்டுள்ள தீயில் இறங்கி தீமிதிப்பு உற்சவத்தினை பக்திபூர்வமாக ஆரம்பித்துவைத்தனர்.

இந்த தீமதிப்பு உற்சவத்தில் சிறுவர்கள்,பெண்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

Exit mobile version