Site icon Tamil News

உடல் எடையை எளிதாக குறைக்கும் வெந்தயம்!

வெந்தயம் பல ஆண்டுகளாக உணவுப் பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது.

மேலும் இதனை உடல்நல பிரச்சினைகளுக்கும் அப்படியே மென்று தின்னலாம். அது மட்டும் இல்லாமல் நீரில் ஊற வைத்து சாப்பிடலாம்.

அந்த வகையில் வெந்தயத்தில் வைட்டமின் ஏ வைட்டமின் பி6 இரும்பு சத்து நார்ச்சத்து மெக்னீசியம் மாங்கனி தாமிரம் போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

வெந்தயம் ஒரு முக்கிய ஆக்சிஜனேற்றியாகவும் உள்ளது.

வெந்தயத்தின் முக்கியமான நன்மை முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. அந்த வகையில் முடி வளர்ச்சியை ஊக்கி வைக்கும் ஊட்டச்சத்துக்கள் வெந்தயத்தில் அதிக அளவில் உள்ளன.

வெந்தயத்தை இரவு முழுவதும் நீரில் ஊறவைத்து அரைத்து தலையில் தேய்த்து குளித்தால் உடல் சூடு நீங்கி முடி வளர்ச்சி அடையும்.

வெந்தயத்தில் நீரழிவு நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்துள்ளது. அந்த வகையில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கிற உதவுகிறது மேலும் நீரழிவு நோயாளிகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

வளர்ச்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கவும் பசியை குறைக்கவும் வெந்தயம் முக்கியமாக பயன்படுகிறது. அந்த வகையில் உடல் எடையை குறைக்க உதவும் வெந்தயம் வயிற்று கொழுப்பை குறைக்க உதவுகிறது.

Exit mobile version