Site icon Tamil News

காஸாவில் வாட்டி வதைக்கும் வெப்பம் – மக்களுக்கு காத்திருக்கும் அடுத்த ஆபத்து

காஸாவில் தீவிரமடையும் போருக்கு மத்தியில் வெப்பநிலை உயரத் தொடங்கியுள்ளதால் நோய்ப் பரவலுக்கான அச்சுறுத்தலும் அதிகரிப்பதாக தெரியவந்துள்ளது.

பாலஸ்தீன அகதிகளுக்கான நிவாரண அமைப்பு இதனை தெரிவித்துள்ளது.

நோய், நோய்ப்பரவல் ஆகியவை குறித்த அச்சம் நிலவுவதாக அமைப்பின் இயக்குநர் ஸ்கோட் ஆண்டர்சன் தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து நெரிசலினால் அனைத்துப் பணிகளும் மெதுவடைந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

உணவு, நீர், இப்போது நிழல் என்று மக்கள் தேடலில் மூழ்கியிருப்பதை அவர் சுட்டினார். கொசுக்களைக் கட்டுப்படுத்தவும் இடங்களைத் தூய்மைப்படுத்தவும் வேலைகள் நடைபெற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

நீர், சுகாதாரம் போன்ற செயல்முறைகளை ஒட்டுமொத்தமாக மேம்படுத்தும் முயற்சிகளும் தொடரவேண்டும் என்று திரு. ஆண்டர்சன் சொன்னார்.

Exit mobile version