Site icon Tamil News

விரதம் இருப்பதால் உடலில் ஏற்படும் எண்ணற்ற நன்மைகள்

நாம் உயிர் வாழ உணவு இன்றியமையாதது. சமச்சீரான, சத்தான உணவை உட்கொண்டவது ஆரோக்கியத்தின் முதல் படியாக பார்க்கப்படுகின்றது. நாம் உட்கொள்ளும் உணவின் தரமும், அளவும், ஊட்டச்சத்துகளும் மிக முக்கியம்.

நாம் சரியான நேரத்தில் போதுமான அளவு உணவை உட்கொள்வது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு அவ்வப்போது உணவை குறைத்துக்கொள்வதும், சாப்பிடாமல் இருந்து, வயிற்றுக்கும், செரிமான அமைப்புக்கும் ஓய்வு அளிப்பதும் முக்கியம். இதன் அடிப்படையிலேயே நம் பாரம்பரியத்தில் விரதங்கள் போன்றவை ஏற்படுத்தப்பட்டுள்ளன.

விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?

மாதம் இருமுறை விரதம் இருப்பதால் பல வித ஆரோக்கிய நன்மைகள் ஏற்பட்கின்றன. இது உடலில் உள்ள நச்சுகளை நீக்கவும், செரிமான அமைப்புக்கு ஓய்வு கொடுக்கவும், எடையைக் கட்டுப்படுத்தவும் உதவுகின்றது. விரதம் இருப்பதால் நம் உடலுக்கு கிடைக்கும் முக்கிய ஆரோக்கிய நன்மைகள் பற்றி இங்கே காணலாம்.

1. உடல் எடையை குறைக்க உதவும்

வாரத்திற்கு இரண்டு முறை விரதம் இருப்பது கலோரி உட்கொள்ளலைக் குறைக்க உதவும். இது தொப்பை கொழுப்பையும் (Belly Fat) உடல் எடையையும் குறைக்க (Weight Loss) உதவுகிறது. நாம் விரதம் இருக்கும்போது. ​​உடல் ஆற்றலுக்காக சேமிக்கப்பட்ட கொழுப்பைப் பயன்படுத்தத் தொடங்குகிறது. இது கெட்ட கொழுப்பின் அளவு குறைவதற்கும் எடை குறைவதற்கும் வழிவகுக்கிறது. மேலும் விரதம் மூலம் வயிற்றை காலியாக வைத்திருப்பது செரிமான செயல்முறையை துரிதப்படுத்த உதவுகிறது. இது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது. விரதம் இருப்பதன் மூலம் கொழுப்பை வேகமாக எரிக்க முடிகின்றது.

2. உடலில் உள்ள நச்சுகள் நீங்கும்

விரதம் இருப்பதன் மூலம் உடலில் உள்ள நச்சுகள் நீக்கப்படுகின்றன (Detox). நாம் விரதம் இருக்கும்போது, ​​உணவு மற்றும் பானங்கள் மூலம் நம் உடலில் சேரும் நச்சுகளை அகற்ற உடலுக்கு நேரம் கிடைக்கிறது. உடலில் உள்ள நச்சுகள் நீங்குவதால், இந்த செயல்முறை நமது சருமத்தை சுத்தமாகவும், பளபளப்பாகவும் மாற்றுகிறது.

3. செரிமான அமைப்புக்கு ஓய்வு கிடைக்கிறது

நாம் விரதம் இருக்கும்போது, உடலின் செரிமான அமைப்பு (Digestion) ஓய்வெடுக்கிறது. அது செரிமான அமைப்பு தன்னை மறுசீரமைக்கவும் சுத்தப்படுத்தவும் நேரம் கொடுக்கிறது. இதன் மூலம் செரிமான சக்தி அதிகரிக்கின்றது. சரியான இடைவெளியில் அவ்வப்போது விரதம் இருப்பதால், செரிமான அமைப்பு மேம்பட்டு, வாயுத்தொல்லை, அமிலத்தன்மை போன்ற பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கின்றது. வாரம் இருமுறை விரதம் இருப்பதால் வயிற்றுப் பிரச்சனைகளும் சரியாகும்.

4. மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது

விரதம் இருப்பது மூளையின் செயல்பாட்டையும் (Brain Power) மேம்படுத்துகிறது. இது மூளையில் நரம்பியக்கடத்திகளின் உற்பத்தியை அதிகரிக்கிறது. இதன் மூலம் மூளை புத்துணர்ச்சி அடைவதுடன், இது மூளைக்கு மன தெளிவையும் கவனத்தையும் அதிகரிக்கிறது. இது தவிர, நாம் விரதம் இருக்கும் போது, உடலில் ஒரு வித அமைதியும் உருவாகின்றது. இது மன அழுத்தம், பதற்றம் மற்றும் கவலையின் அளவைக் குறைக்கிறது.

5. நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது

விரதம் இருப்பது, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் (Immunity) அதிகரிக்கிறது. விரதமிருக்கும் போது, பழைய செல்கள் பழுதடைந்து புதிய செல்கள் உருவாகி நோய் எதிர்ப்பு சக்தி பலப்படுகின்றது. இது தவிர, இது, உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைத்து, நோய்களை எதிர்த்துப் போராடும் ஆற்றலை அதிகரிக்கிறது.

Exit mobile version