Site icon Tamil News

மேல் மாகாணத்தில் முச்சக்கர வண்டிகளுக்கான கட்டணம் குறைப்பு

மேல் மாகாணத்தில் இயங்கும் வாடகை முச்சக்கர வண்டிகளுக்கு கிலோமீட்டருக்கு அறவிடப்படும் கட்டணத்தை பத்து ரூபாவால் குறைக்க வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை தீர்மானித்துள்ளது.

இந்த கட்டணங்கள் வரும் 15ம் திகதி முதல் குறைக்கப்படும் என அதிகாரசபை கூறுகிறது.

இதன்படி, முதல் கிலோமீட்டருக்கு அறவிடப்படும் நூறு ரூபா கட்டணத்தில் எவ்வித மாற்றமும் இல்லை எனவும், இரண்டாவது கிலோமீட்டரில் இருந்து இந்த விலை குறைக்கப்படும் எனவும் வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பிரசன்ன சஞ்சீவ தெரிவித்துள்ளார்.

அதன்படி இரண்டாவது கிலோமீட்டருக்கு 90 ரூபா அறவிடப்படும். இதற்கு முன், 100 ரூபாய் வசூலிக்கப்பட்டது.

இடைக்கால விலையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த புதிய விலைகள் அடுத்த ஆறு மாதங்களில் கட்டண மறுஆய்வுக் குழுவால் முடிவு செய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும், நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிகமாக கட்டணம் வசூலிக்கும் முச்சக்கர வண்டிகளின் வாடிக்கையாளர்கள் 0760450860 என்ற தொலைபேசி இலக்கத்திற்கோ அல்லது WhatsApp ஊடாகவோ அறிவிக்குமாறு வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Exit mobile version