Site icon Tamil News

ஜெர்மனியில் குழந்தைகள் பிறப்பில் வீழ்ச்சி – வெளியான புதிய அறிக்கை

ஜெர்மனி நாட்டில் 2022 ஆம் ஆண்டு பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை தொடர்பில் புள்ளி விபரம் வெளியாகியுள்ளது.

ஜெர்மனியின் புள்ளி விபரம் திணைக்களமானது 2022 ஆம் ஆண்டு ஜெர்மனியில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கையை வெளியிட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டு மொத்தமாக ஜெர்மனியில் 7 லட்சத்து 38 ஆயிரத்து 819 குழந்தைகள் பிறந்ததாகவும்,

இந்நிலையில் 2021 ஆம் ஆண்டு 7 லட்சத்து 95 492 குழந்தைகள் பிறந்ததாகவும் இந்த புள்ளி விபரத்தில் தெரியவந்துள்து.

ஆகவே 2022 ஆம் ஆண்டு பிறந்த குழந்தைகளுடைய எண்ணிக்கையானது 2021 உடன் ஒப்பிடும் பொழுது 56673 குழந்தைகள் குறைந்தளவு பிறந்ததாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில் தற்பொழுது ஜெர்மனியில் குழந்தைகளின் பிறப்பு விகிதம் ஆனது 1.46 சதவீதமாக உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இதேவேளையில் 1970 ஆம் ஆண்டு குழந்தை பிறப்புகளுடைய விகிதமானது 1.3 சதவீதமாக இருந்ததாகவும்,

இந்நிலையில் அந்த காலத்தில் ஆட்சி செய்த அரசாங்கம் குழந்தைகளின் பிறப்பை அதிகரிப்பதற்காக எல்டன் கில்ட் மற்றும் கிண்ட கார்டன் என்று சொல்லப்படுகின்ற பாலர் பாடசாலைகளில் அனுமதியை பெறுவதற்கு இலகுப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணத்தினால் தற்பொழுது ஓரளவு குழந்தைகளின் பிறப்பு அதிகரிதடதுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் ஜெர்மனியில் வெளிநாட்டவர்களுடைய எண்ணிக்கை அதிகரித்த காரணத்தினால் சனதொகையுடைய வளர்ச்சியை சராசரியாக பேணக்கூடியதாக இருந்ததாக இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Exit mobile version