Site icon Tamil News

ஆஸ்திரேலியாவில் போலி திருமண பதிவாளர் – பல திருமணங்களை இரத்து செய்ய வேண்டிய நிலை

மெல்பேர்னில் திருமண பதிவாளர் போல் நடித்து ஐந்து சட்டவிரோத திருமணங்களை செய்த நபருக்கு நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது.

2022ஆம் ஆண்டு மார்ச் மற்றும் 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு இடையில் விக்டோரியாவில் நடந்த ஐந்து திருமணங்களில் இருந்து அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியாக காட்டிக்கொண்டு 700 முதல் 1,000 டொலர் வரை மோசடி செய்ததாக 31 வயதான அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இவருக்கு கீழ் திருமணம் செய்து கொண்ட ஐந்தாவது ஜோடி, அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகள் பட்டியலில் இவரின் பெயரை காணாததால், மத்திய பொலிஸாரிடம் புகார் அளித்துள்ளனர்.

அந்த நபர் பொதுநலவாய அமைப்பின் கீழ் பதிவு செய்யப்பட்ட திருமணங்களின் அங்கீகரிக்கப்பட்ட பதிவாளர் அல்ல என்பதை சட்டமா அதிபர் திணைக்களம் உறுதிப்படுத்தியதை அடுத்து பெப்ரவரி மாதம் பொலிசார் அவரைக் கைது செய்தனர்.

சந்தேக நபர் திங்கட்கிழமை மெல்பேர்ன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார், அங்கு அவர் மோசடியான திருமணத்தை நடத்திய நான்கு குற்றச்சாட்டுகள் மற்றும் ஒரு பொது அதிகாரியைப் போல ஆள்மாறாட்டம் செய்த குற்றச்சாட்டில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார்.

சந்தேகநபருக்கு 50 மணித்தியாலங்கள் சமூக சேவை செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஆறு மாத சமூக சேவையை மேற்கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆஸ்திரேலியாவில் பதிவு செய்யப்பட்ட திருமணப் பதிவாளர் போல் ஆள்மாறாட்டம் செய்வது மிகவும் சட்டவிரோதமான மோசடி மற்றும் கடுமையான நிதி, மத மற்றும் சட்டரீதியான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் என பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Exit mobile version