Site icon Tamil News

பிரான்ஸில் உச்சக்கட்ட வன்முறை – தடுக்க தீவிரமாக போராடும் பொலிஸார்

பிரான்ஸில் நான்காவது நாளாக வன்முறை தொடர்வதால் கடும் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.

இதனை கட்டுக்குள் கொண்டுவர 45,000 பொலிஸ் அதிகாரிகள் தயார்நிலையில் உள்ளனர்.

போக்குவரத்துச் சோதனையில் காவல்துறை அதிகாரி ஒருவர் பதின்ம வயது இளையரைச் சுட்டுக் கொன்றதை அடுத்து, அங்குப் பெரிய அளவிலான கலவரங்கள் மூண்டுள்ளன.

பாரிஸ், Marseille, Toulouse, Strasbourg போன்ற நகரங்களில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. சிறப்புப் படைகள், கவச வாகனங்கள் ஆகியவை சாலையில் காணப்படுவதாக அறிக்கைகள் குறிப்பிட்டன.

800க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் 2,000 வீடுகளை எரித்துவிட்டதாக அந்நாட்டு உள்துறை அமைச்சு தெரிவித்தது.

சுமார் 500 கட்டடங்கள் சேதப்படுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டக்காரர்கள் கடைகளில் புகுந்து களவாடியதாகவும் அமைச்சு குறிப்பிட்டது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் உச்சநிலை மாநாட்டில் கலந்துகொண்டிருந்த பிரஞ்சு அதிபர் இமானுவல் மக்ரோன் (Emmanuel Macron) கலவரங்கள் தொடர்பான நெருக்கடிநிலைச் சந்திப்பை வழிநடத்த நாடு திரும்பியிருக்கிறார்.

நாட்டில் அவசரநிலையைப் பிறப்பிக்க வேண்டியதில்லை என்று அவர் குறிப்பிட்டார். ஆனால் நிலைமையைப் பற்றி அனைத்துக் கோணங்களிலிருந்தும் ஆராயப்படுவதாகப் பிரஞ்சுப் பிரதமர் Élisabeth Borne கூறினார்.

Exit mobile version