Site icon Tamil News

இலங்கைக்கு எதிரான இங்கிலாந்தின் முதல் 11 பேர் கொண்ட அணி அறிவிப்பு

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது.

இந்த தொடரின் முதல் போட்டி வரும் 21ம் தேதி மான்செஸ்டரில் தொடங்குகிறது.இந்த தொடருக்கான இங்கிலாந்து அணியில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் இடம் பெறவில்லை.

இங்கிலாந்தில் நடைபெற்ற தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடரின் போது ஸ்டோக்ஸ் காயம் அடைந்ததால் அவர் இந்த தொடரில் இருந்து விலகி உள்ளார்.

அவருக்கு பதிலாக இங்கிலாந்தின் கேப்டனாக ஆலி போப் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான ஆடும் லெவனை இங்கிலாந்து அறிவித்துள்ளது.

இந்த லெவனில் ஜேக் க்ராவ்லி காயம் காரணமாக இடம் பெறவில்லை. அதேவேளையில் மேத்யூ பாட்ஸ் அணிக்கு திரும்பி உள்ளார்.

இங்கிலாந்து ஆடும் லெவன் விவரம்: டேன் லாரன்ஸ், பென் டக்கட், ஆலி போப் (கேப்டன்), ஜோ ரூட், ஹாரி புரூக், ஜேமி ஸ்மித் (விக்கெட் கீப்பர்), கிறிஸ் வோக்ஸ், கஸ் அட்கின்சன், மேத்யூ பாட்ஸ், மார்க் வுட், ஷோயப் பஷீர்.

 

Exit mobile version