Site icon Tamil News

Euro 2024 இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற இங்கிலாந்து அணி

பெர்லினில் ஞாயிற்றுக்கிழமை நடக்கவிருக்கும் ஸ்பெயினுக்கு எதிரான யூரோ 2024 இறுதிப் போட்டிக்கு 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து தகுதி பெற்றுள்ளது.

இங்கிலாந்து இப்போது மீண்டும் ஐரோப்பிய சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியை எட்டியுள்ளது, இங்கிலாந்து வெளிநாட்டு மண்ணில் யூரோ பைனலுக்கு முன்னேறியது இதுவே முதல் முறையாகும்.

முதலாம் பாதியில் நெதர்லாந்து வீரர் சேவி சைமன்ஸ் அற்புதமான கோல் மூலம் தனது அணியை முன்னிலை படுத்தினார்.

11 நிமிடங்களுக்குப் பிறகு ஹாரி கேன் பெனால்டி சூட் மூலம் நெதர்லாந்து அணியுடன் சமநிலைப்படுத்தினார்.

இருப்பினும்,முதலாம் பாதி முடிவடைந்த நிலையில் இரண்டாம் பாதி முழுவதும் இரு அணிகளும் வெற்றிக்காக போராடி வந்தது.

போட்டியின் 90 நிமிடம் முடிவடையும் நிலையில் மாற்று வீரராக உள்ளே வந்த 28 வயது வாட்கின்ஸ் இறுதி நேரத்தில் ஒரு கோல் அடித்து தனது அணியை இறுதி போட்டிக்கு அழைத்து சென்றார்.

இந்த வெற்றி மூலம் இங்கிலாந்து அணி இரண்டாவது முறையாக யூரோ இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

இதற்கு முன்னதாக 202ல் இங்கிலாந்து அணி இத்தாலி அணியை இறுதிப்போட்டியில் எதிர்கொண்டு பெனால்டி சூட் முறையில் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version