Site icon Tamil News

இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது.

இதில் முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி இன்று லண்டனில் ஆரம்பமாகிறது. இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான இங்கிலாந்தின் முதலில் விளையாடும் 11 பேர் அறிவிக்கப்பட்டுள்ளது.

முதலாவது போட்டியின் போது காயம் அடைந்த மார்க் வுட்டிற்கு பதிலாக ஆலி ஸ்டோன் இடம் பிடித்துள்ளார்.

இங்கிலாந்து ஆடும் லெவன் விவரம் – பென் டக்கட், டேன் லாரன்ஸ், ஆலி போப் (கேப்டன்), ஜோ ரூட், ஹாரி புரூக் (துணை கேப்டன்), ஜேமி ஸ்மித் (விக்கெட் கீப்பர்), கிறிஸ் வோக்ஸ், கஸ் அட்கின்சன், மேத்யூ பாட்ஸ், ஆலி ஸ்டோன், ஷோயப் பாஷீர்.

 

Exit mobile version