Site icon Tamil News

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!

வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பல்வேறு மோசடிகளில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் சடுதியாக அதிகரித்து வருவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

இதன்படி  இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 1150 க்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதிப் பொது முகாமையாளர் காமினி செனரத்யாப்பா குறிப்பிட்டார்.

2021 ஆம் ஆண்டில் வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு பெற்று தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் 552 முறைப்பாடுகள் பணியகத்துக்கு கிடைக்க பெற்றுள்ளதாகவும், இந்த எண்ணிக்கை கடந்த வருடம் 1337 ஆக அதிகரித்துள்ளதாகவும்  காமினி செசனரத்யாப்பா கூறியுள்ளார்.

மக்கள் மிக விரைவாக தவறாக வழி நடத்தப்படுகிறார்கள். மக்களை ஏமாற்றி வெளிநாட்டு வேலைகளை காட்டி இந்த பணத்தை சட்டவிரோதமாகவோ அல்லது மோசடியாகவோ பெற்றுக் கொள்ளும் வகையில் சில ஒழுங்கமைக்கப்பட்ட நபர்கள் செயற்பட்டு வருகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version