Site icon Tamil News

இலங்கை : கண்டி மாநகர சபை முன் திரண்ட ஊழியர்கள்!

கண்டி மாநகர சபையின் அனைத்து ஊழியர்களும் மாநகர சபை வளாகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மத்திய சந்தைக்கு முன்பாக அனுமதியற்ற வர்த்தகரால் மாநகர சபையின் நிர்வாக உத்தியோகத்தர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகிறது.

மத்திய சந்தைப் பகுதிக்கான அணுகு வீதியை அடைத்து வியாபாரம் செய்வதை தவிர்க்குமாறு  அறிவித்தமையினால் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

தாக்குதலுக்கு உள்ளான நிர்வாக அதிகாரி தற்போது கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒரு வாரத்திற்கு முன்னர், குப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர் ஒருவரும் தாக்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், இந்த நிலையில், தமது பாதுகாப்பை உறுதி செய்யுமாறு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மாநகரசபை ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version