Site icon Tamil News

உலகின் முதல்நிலை செல்வந்தராக எலான் மஸ்க் தெரிவு!

எலோன் மஸ்க் உலகப் பணக்காரர்கள் தரவரிசையில் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார்.

புளூம்பெர்க் பில்லியனர்ஸ் இன்டெக்ஸ்,   உலகின் 500 பணக்காரர்களின் தினசரி தரவரிசையை வெளியிட்டது.

இதன் மதிப்பீட்டின் படி,  ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளரும்,  டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸின் தலைமை நிர்வாக அதிகாரியுமான எலான் மஸக், $192 பில்லியன்  சொத்துமதிப்புடன்  முதலிடத்தை பிடித்துள்ளதாக அறிவித்துள்ளது.

இவருக்கு அடுத்தப்படியாக  187 பில்லியன் டாலர் மதிப்புடைய ஆடம்பரப் பொருட்கள் நிறுவனமான LVMH இன் தலைமை நிர்வாக அதிகாரி  பிரெஞ்சு பில்லியனர் பெர்னார்ட் அர்னால்ட் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.

முன்னதாக மஸ்கை தோற்கடித்து அர்னால்ட் உலகின் மிகப் பெரிய செல்வந்தர் என அந்தஸ்த்தை பெற்றிருந்தார். ஆனால் சமீபத்தில்,   LVMH இன் பங்குகள்  10% சரிந்தன. இதனால்  அர்னால்ட்டின் நிகர மதிப்பு ஒரே நாளில் $11 பில்லியன் குறைந்தது.

இவர்களைத் தவிற மூன்றாவது இடத்தை  அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் 144 பில்லியன் டாலர்களுடன் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version