Site icon Tamil News

இந்தியா வரும் எலான் மஸ்க் : 02 -03 பில்லியன்கள் வரை முதலீடு செய்ய வாய்ப்பு!

டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் அடுத்த வாரம் இந்தியா வரவுள்ளார்.

இதன்போது பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பு மற்றும் உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாட்டில் ஒரு தொழிற்சாலையை உருவாக்க டெஸ்லா திட்டமிட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பில் X தளத்தில் பதிவிட்டுள்ள அவர், இந்தியா வருவதற்கான திகதியை குறிப்பிடவில்லை.

2022 ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் தனியாரால் உருவாக்கப்பட்ட ராக்கெட்டை ஏவிய ஸ்கைரூட் ஏரோஸ்பேஸின் இணை நிறுவனர் பவன் சந்தனா, திங்களன்று மஸ்கை சந்திக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தற்போது உலகின் நான்காவது பெரிய பணக்காரரான மஸ்க், தெற்காசிய நாட்டில் 2 பில்லியன் டாலர் முதல் 3 பில்லியன் டாலர் வரை முதலீடு செய்ய உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version