Site icon Tamil News

மட்டு வவுணதீவு பகுதியில் யானைகள் அட்டகாசம்: மக்கள் விசனம்

மடடக்களப்பு மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவில் கடந்த ஒரு வாரத்தில் யானைகளினால் 10 வீடுகள் உடைத்துள்ளதுடன் 2 ஆயிரத்துக்கு மேற்றபட்ட தென்னை மரங்கள் அழிக்கப்பட்டுள்ளது.

தினம் தினம் யானைகளினன் அட்டகாசத்தால் மக்கள் அச்சநிலையால் குடிமனைகளில் இருந்து வெளியேறும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்குமாறு மு.கிழக்கு மாகாணசபை உறுப்பினர், ஈ.பி.ஆர்.எல்.எப் இரா.துரைரெத்தினம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மு.கிழக்கு மாகாணசபை உறுப்பினர், ஈ.பி.ஆர்.எல்.எப் இரா.துரைரெத்தினம் இன்று ஞாயிற்றுக்கிழமை (22) ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

”குறித்த பிரதேச செயலகத்தின் கீழ் 75,000 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்கில் 24 கிராமசேவகர் பிரிவுகளையும் 138 கிராமங்களை கொண்ட 10.817 குடும்பங்களைச் சேர்ந்த ,33.357 சனத்தொகையையும், 23.679 வாக்காளர்களையும் உள்ளடக்கிய இப் பிரதேசத்தில் விவசாயம் மற்றும் மேட்டுநிலப்பயிர் செய்கை, செய்கையையும் வாழ்வாதாரமாக பெரும்பான்மையான மக்கள் செய்துவருகின்றனர்.

2007ம் ஆண்டு மக்கள் இடம் பெயர்ந்த போது காட்டு யானைகள் எல்லைக் கிராமங்களான கெவிளியாமடு தொடக்கம் கற்பானை வரை உள்ள கிராமங்களுக்குள் நுழைந்து வீடுகளிலும், காணிகளிலும் உள்ள மரவகைகளான தென்னை, பனை, மா, பலா,வாழை, பப்பாசி, முந்திரிகை மற்றும் தானிய வகைகளான நெல்,அரிசி,சோளன்,கௌப்பி,இறுங்கு,எள்ளு போன்ற வற்றை பயிர்செய்கைகளை உணவாக உட்கொண்டு சேதப்படுத்தியதுடன் அங்கிருந்த தற்காலிக வாடிகள், கொட்டில்கள் 400ற்கு மேற்பட்டவைகள் அழிக்கப்பட்டுள்ளது

இந்நிலையில் கடந்த 19, 20, 21ம் திகதிகளில் ஆயித்தியமலை, நெல்லூரிலும் 6ம்கட்டை நெடியமடுவிலும் 8ம்கட்டைஉன்னிச்சை, பாவற்கொடிச்சேனை பிரதேசங்களில் குடிமனைகளுக்குள் காட்டு யானைகள் உள் நுழைந்து 8 பெரிய நிரந்தர வீடுகளையும் இரண்டு தற்காலிக வீடுகள் உட்பட 10 வீடுகளை உடைத்ததையடுத்து நித்திரையில் இருந்தவர்கள் தெய்வாதீனமாக மயிரிழையில் உயிர் தப்பினர்.

கடந்த இது பத்து வருடங்களுக்கு மேலாக இப்பகுதி குடிமனைகளுக்குள் காட்டுயானைகள் உட்புகுந்து வீடகள் மற்றும் தென்னை பயர்செய்கைகளை சேதப்படுத்தி வருகின்றது இதனால் அச்சமடைந்துள்ள மக்கள் விவசாயச் செய்கையை கைவிட்டு வீடுகளில் இருந்து இடம் பெயர்ந்து கொண்டே உள்ளனர்.

யானை தாக்குதலில் உயிர் இழந்தவர்களுக்கு 10 இலட்சம் நஸ்டஈடாக வழங்கினாலும். காயமடைந்தவர்களுக்கும், பாதிக்கப்பட்ட வீடுகளுக்கும், பாதிக்கப்பட்ட விவசாயத்திற்கும் ஒரு வருடத்திற்கு மேலாகியும் நஸ்டஈடு வழங்கப்படவில்லை அதேவேளை பாதிக்கப்பட்ட வீடுகளை திருத்த முடியாமல் வீடும் இல்லாமல் நிர்க்கதியாகியுள்ளனர்

எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் அமைச்சும் ஏனோதானோ என்று இருப்பதை கைவிட்டு ஒரு சரியான திட்டத்தை தயாரித்து செயல்வடிவத்தில் இறங்க இந்த பிரதேச மக்களை யானைகளில் இருந்து காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் அந்த அறிக்கையில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Exit mobile version