Site icon Tamil News

கழிவுநீர் வடிகாலில் இருந்து மீட்கப்பட்ட எட்டுமாத கரு!

The development of a human embryo inside the womb during pregnancy. Little baby 3d illustration

கர்ப்பிணிப் பிரிவுக்கு அருகில் உள்ள கழிவுநீர் வடிகாலில் இருந்து எட்டு மாத மனித கரு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கண்டி தேசிய வைத்தியசாலையி​ல் இருந்தே, இக்கரு மீட்கப்பட்டுள்ளது.

வடிகால் அமைப்பை சுத்தம் செய்ய சென்ற தொழிலாளி ஒருவர் அதை பார்த்து வைத்தியசாலை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.

இது தொடர்பில் கண்டி தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் இரேஷா பெர்னாண்டோவிடம் கேட்டபோது, ​​கண்டி தேசிய வைத்தியசாலையின் கர்ப்பிணிப் பிரிவில் உள்ள தாயொருவர் இதனை வடிகாலில் வீசியிருக்கலாம் எனினும். அந்த தாய் தொடர்பில் இதுவரையில் தகவல் எவையும் கிடைக்கவில்லை என தெரிவித்தார்.

இந்த மனித கரு மிருகத்தால் இழுத்துச் செல்லப்பட்டு இந்த இடத்திற்கு கொண்டு வரப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும், கண்டி தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் மனித கருவை வைக்கப்பட்டுள்ளதாகவும் சட்ட வைத்திய அதிகாரி பரிசோதிக்கும் வரையில் உறுதியான தகவல் இல்லை எனவும் பணிப்பாளர் தெரிவித்தார்.

இது தொடர்பில் கண்டி தலைமையக பொலிஸாரும் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Exit mobile version